பாகுபலி என்று படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான நடிகராகிவிட்டார் பிரபாஸ்.தற்போது ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்துள்ளர்.ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது.சமீபத்தில் க்ரித்தி சனோன் அளித்த பேட்டியில், ”பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இருவரும் காதலிப்பதை இந்தி நடிகர் வருண் தவானும் மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார்.இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ‘ஆதிபுருஷ்’ படப்பிடிப்பின் போது க்ரித்தி சனோனுக்கு பிரபாஸ் புரபோஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன