ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன்.தன் முதல் படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த பிரதீப் லவ் டுடே என்ற படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் அறிமுகமானார்.இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில், லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப், நடிகர் விஜய்க்கு கதை சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதுகுறித்து அவரிடமே சமீபத்திய பேட்டியில் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது : “விஜய் சாருக்கு கதை சொன்னது உண்மை தான். அதைப்பற்றி தற்போது பேசினால், லவ் டுடே படத்தின் புரமோஷனுக்காக பேசினேன் என நினைத்து விடுவார்கள்.

இப்படம் சக்சஸ்ஃபுல் ஆக ஓடி முடித்த பின்னர் அது பற்றி விரிவாக பேசுகிறேன்” என பிரதீப் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரதீப்பின் அடுத்த படம் விஜய் உடன் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது