Skygain News

ஈரோடு மாவட்டத்தில் மர்மமுறையில் சடலமாக கிடந்த கர்பிணி பெண்..!

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள ராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (26) பிருந்தா (23) தாம்பத்தினர். இவர்கள் கடந்த 1.5 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களுக்கு பின்பு இருவரும் ராயபாளையத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பிருந்தா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி கார்த்தி, திண்டுக்கல்லில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்று விட்டார். இதனால் பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்றிரவு தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்ட பிருந்தா, பின்னர் தூங்க சென்றுள்ளார்.

இந்த நிலையில் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பிருந்தாவின் தாய் மற்றும் அவரது கணவர் கார்த்திக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிருந்தா உயிரிழந்த நிலையில் கிழே சடலமாக கிடந்தார். இதனை கண்டு உறவினர்கள் மற்றும் அவரது கணவர் கதறி அழுதனர். தகவல் அறிந்த சித்தோடு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன்டையே பிருந்தாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, அவரது தாயார் சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிருந்தா இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More