மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் மூன்று நாள் சுற்றுலா பயணமாக தமிழகம் வருகை புரிந்தார்.முதல் நாள் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்ட அவர் இரண்டாவது நாள் சென்னையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின் இன்று மூன்றாவது நாள் கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த அவர் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை புரிந்தார்.
அவரை வருவாய் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கனிமொழி , சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் திருக்கோயில் வரலாறு மற்றும் தாயார் சன்னதி, மூலவர் வரதராஜ பெருமாள் ஆகிய சன்னதிகளில் அவர் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தோஷம் நீக்கும் தங்க பள்ளியை வழிபட்டு கோயில் திருவிழா மற்றும் சிறப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.மேலும் உலகப் புகழ் பெற்ற கோயில் இட்லி அவருக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்த அவரை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நடராஜ சாஸ்திரி , கார்த்தி , மணியம் உள்ளிட்டோர் மேள தாளங்கள் முழங்க இரட்டைக் குடைகளுடன் வரவேற்று, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு பிரசாதங்களை வழங்கினர்.
ஜனாதிபதி வருகை ஒட்டி காஞ்சிபுரம் முழுக்க காவல்துறை சார்பில் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருக்கோயில் சிறப்புகள் உடைய இடங்களில் நின்று தனது மனைவி மற்றும் அர்ச்சகர் உடன் மகிழ்ச்சியுடன் அழைத்து பல்வேறு இடங்களில் புகைபடம் எடுத்துக் கொண்டு, சிறப்பு விருந்தினர்கள் புத்தகத்தில் தனது வருகையை பதிவு செய்தார். மேலும் பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஏகாம்பரத நாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.