நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு பிரதமர் மோடி பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ வந்தார். செங்கோட்டை வந்தடைந்த பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
பாரத பிரதமருக்கு முப்படைகள் சார்பில் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. முப்படை மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் இந்நிகழவில் பங்கேற்றனர்.
முன்னதாக, தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் வீரமணக்கம் செலுத்திய பிறகு, பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டைக்கு வந்தார். எம்.ஐ.17 1 வி ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவி சென்றது.
தேசியக் கொடி ஏற்றப்பட்ட உடனே தேசத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், உலகம் முழுக்க இந்தியர்கள் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இது மிகவும் பெருமைக்குரிய நிகழ்வாகும். இது வரலாற்றில் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.