பிரதமர் மோடி நாளை ( நவம்பர்.11ம் தேதி) தமிழகம் வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் நடக்கும் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நாளைய பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுக்கும் டாக்டர் பட்டத்தை வழங்கவிருக்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி அம்பாத்துறையில் ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. இதில் 6 பேர் கொண்ட குழுவினர், ஹெலிகாப்டரில் இறங்கி ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைந்துள்ள பகுதி, அதன் உறுதி தன்மை மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்தனர்.
நாட்டின் பிரதமர் கலந்து கொள்ளும் விழா என்பதாலும், சமீபத்தில் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தாலும் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது தென்மாவட்டத்த்டத்தை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் திண்டுக்கல்லில் குவிக்கப்பட்டுள்ளனர்.