குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இன்று தேர்தல் நடைபெறவுள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளில் அகமபாத்தில் உள்ள 19 சட்டப்பேரவை தொகுதிகளும் அடங்கும். பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத்தில் தனது வாக்கினை பதிவு வரிசையில் நின்று பதிவு செய்துள்ளார்.

இன்றைய தேர்தலில் மாநில முதல்வர் பூவேந்திரபடேல் உட்பட முக்கிய பிரபலங்கள் பலரும் போட்டியிடுகின்றனர். 14,975 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1.13 லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளனர். வாக்களிக்க தகுதியான வாக்காளர்களாக 2. 51 கோடி பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர்.1.29 கோடி பேர் இதில் ஆண்கள் 1.22 கோடி பேர் பெண்கள். 5. 96 லட்சம் புதிய வாக்காளர்களும் இந்த பட்டியலில் உள்ளார்கள். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பாதுகாப்பு பணியில் மாநில போலீசாருடன் துணை இராணுவமும் களமிறங்கி இருக்கிறது.
