Skygain News

பிரதமர் மோடி இன்று மதுரை வருகை: பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யும் பாஜக..!

இன்று பிரதமர் மோடி திண்டுக்கல் வர இருப்பதால் அவரை வரவேற்க தமிழக பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருக்கின்றன. மாநில தலைவர் அண்ணாமலை இதற்கான ஏற்பாடுகளை மிக பிரமாண்டமாக செய்து வருகிறார். இதற்காக அவர் திண்டுக்கல், மதுரையில் முகாமிட்டு அந்த வேலைகளை கவனித்து வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் இரண்டு மணிக்கு மதுரை வருகிறார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காந்திகிராமம் செல்கிறார் . இதற்காக காந்திகிராமம் பல்கலைக்கழக வளாகத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருக்கிறது. பிற்பகல் 3.30 மணி அளவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

மதுரை விமான நிலையத்திலேயே பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, பாஜக நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பிரதமரை வரவேற்க செல்ல திட்டமிட்டு உள்ளார்கள். பிரதமர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து பன்னீர்செல்வம் மதுரை செல்ல உள்ளார் என்று அவர் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.