நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக டி20 ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.ஆனால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்.

இதனால் மனம் உடைந்த பிரித்வி ஷா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் சாய் பாபாவின் புகைப்படத்தை போட்டுள்ள பிரித்வி ஷா, சாய் பாபா, நீ நடைபெறும் அனைத்தையும் பார்க்கிறேன் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.