Skygain News

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளர்..! பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!

திருநின்றவூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி. இப்பள்ளியில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளராக உள்ள வினோத் என்பவர் இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தனியாக அழித்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்கதை ஆன நிலையில் மாணவிகள் சிலர் இவரின் பாலியல் தொல்லையை தாங்காமல் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் மாணவி ஒருவரின் பெற்றோர் பள்ளியில் வந்து புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் மற்ற மாணவர்களின் பெற்றோர் என 100க்கும் மேற்பட்டோர், மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சனை பெரிதானதை அறிந்த பள்ளி தாளாளர் வினோத் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் வினோத்தை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என பெற்றோர்கள் உறுதியாக கூறிய நிலையில் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கலைக்க முயன்றதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது மாணவர்கள் சிலரை போலீசார் தரதரவனை இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொளும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக உள்ள மாணவர்களும் பெற்றோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பள்ளியின் ஆசிரியர்கள் சிலரும் திருநின்றவூர் நகர் மன்ற தலைவர் உஷாராணி உள்ளிட்டோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பள்ளியின் தலைவர் ஜெயராமனை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பள்ளியின் தாளாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More