Skygain News

நானே வருவேன் படத்தின் நிலை என்ன ? பிரபலம் வெளியிட்ட அறிவிப்பு..!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இதற்க்கு முன் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. அனிருத்தின் இசையில் நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மேலும் வசூலிலும் சாதனை படைத்தது திருச்சிற்றம்பலம் திரைப்படம். இதன் மூலம் தனுஷ் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.இந்நிலையில் இதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. என்னதான் படம் நன்றாக இருந்தலும் நானே வருவேன் படத்துடன் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதால் இப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்தது.

அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் மோசமான வசூலை பெற்று வருவதாக தகவல்கள் வந்தன.இதைப்பற்றி பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் பேசுகையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அதே சமயம் நானே வருவேன் திரைப்படமும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.நானே வருவேன் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தற்போது கிடைத்துள்ள வசூலின் படி இப்படம் தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாகவே அமைந்துள்ளது.

எனவே நானே வருவேன் திரைப்படமும் வெற்றி படம் தான் என கூறினார் தனஞ்சயன்.இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிக்க செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் ராயன் என்ற திரைப்படம் உருவாகப்போவதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.