சிம்பு மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் செம பிசியாக இயங்கி வருகின்றார். கடந்தாண்டு வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் பார்த்த சிம்பு ரசிகர்கள் பரம திருப்தி அடைந்தார்கள். மற்றவர்கள் பாசிட்டிவாகவும், நெகட்டிவாகவும் சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள்.
இருப்பினும் வெந்து தணிந்தது காடு படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவுக்கு சொகுசு காரை பரிசளித்தார் ஐசரி கணேஷ்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியின் மூலம் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருவது குறிப்பிடடதக்கது.