தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை தயாரித்த பெருமைக்குரிய தயாரிப்பாளர் கே.முரளிதரன் மாரடைப்பால் காலமானார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பாக பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கியவர் தான் முரளிதரன்.விஜயகாந்த், கமல், பிரபு, விஜய், அஜித், சூர்யா என என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் உடன் அவர் பணியாற்றி இருக்கிறார்.
Shocked to hear about the sudden demise of popular Tamil producer #KMuralidharan of Lakshmi Movie Makers (@lmmiltd) who passed away due to a cardiac arrest in Kumbakonam. #ripKMuralidharan pic.twitter.com/jOZKImqwCR
— Sreedhar Pillai (@sri50) December 1, 2022
சூர்யாவின் உன்னை நினைத்து, விஜய்யின் ப்ரியமுடன், பகவதி போன்ற படங்களையும் அவர் தயாரித்து இருக்கிறார்.மொத்தம் 28 திரைப்படங்களை தயாரித்த முரளிதரன் தனது 66 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.இவரது மறைவு திரைத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.