மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். பல ஆண்டுகாலமாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க துடித்தார் மணிரத்னம். நடிகர்கள் விஜய்யில் துவங்கி சிம்பு, நயன்தாரா வரை அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார் மணிரத்னம்.
ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் பல ஆண்டு போராட்டத்திற்கு தற்போது தான் மணிரத்னத்திற்கு பலன் கிடைத்துள்ளது என்று சொல்லவேண்டும். பல ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு இப்படம் கடந்த மாதம் திரையில் வெளியானது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் வயது வித்தியாசமின்றி இப்படத்தை அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் இப்படம் இதுவரை கிட்டத்தட்ட 500 கோடி வசூலித்ததாக தகவல் வந்துள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது படங்கள் திரையில் வெளியானாலும் பல திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.அதன் படி இப்படம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி OTT யில் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது. திரையில் காண தவறிய ரசிகர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை OTT யில் காண ஆவலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.