விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒழிந்தியப்பட்டு ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட தெருக்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூபாய் 3.76 லட்சம் மதிப்பீட்டில் 752 மீட்டர் பைப் லைன் மற்றும் குடிநீர் குழாய் அமைத்தல் பணி நடைபெற்றது தற்போது அந்த பணியானது முடிந்து நிலையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் சரியான முறையில் வைக்காமல் டம்மி குழாய் வைத்துவிட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் மேலும் நிதி முறைகேடு செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா மற்றும் அவர் மகன் சக்திவேல் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றன இது குறித்து மாவட்ட நிர்வாகம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை எடுத்துள்ளார்.

குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் டம்மி குழாயை செட் செய்து கணக்கிற்காக காட்டப்பட்டு முறைகேடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது