விருதுநகரிலிருந்து வடமலைகுறிச்சி செல்லும் சாலையில் சிவஞானபுரம், சின்ன மூப்பன்பட்டி, பாண்டியன் காலனி, கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மதுரை நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடமலைக்குறிச்சி செல்லும் சாலைக்கு செல்வதற்கு முறையான அணுகு சாலை இல்லாத காரணத்தால் தேசிய நெடுஞ்சாலை எதிர் புறத்தில் பயணிக்கும் சூழ்நிலை இருப்பதால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்தும் உயிர் பலியும் ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் அணுகு சாலை இல்லாத காரணத்தால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் முறையான அணுகு சாலை அமைத்து தரக் கோரி அப்பகுதியைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல் துறையினர் அணுகு சாலை அமைத்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனும் பேச்சுவார்த்தையின் பெயரில் பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.