இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் திருத்தம், சுருக்கம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டார்
விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி தொகுதியில் 304 வாக்குச்சாவடி மையங்களும், மயிலம் தொகுதியில் 265 வாக்குச்சாவடி மையம், திண்டிவனம் தனித் தொகுதி 266, வானூர் தனித் தொகுதி 277, விழுப்புரம் தொகுதி 289, விக்கிரவாண்டி தொகுதி 275, திருக்கோவிலூர் தொகுதி 286, ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1962 வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.
