ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகர் பகுதியில் 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந்த திறப்பு நிகழ்ச்சிக்கு மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய பகுதி நேர நியாய விலைக் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடை பொருட்களை அமைச்சர் ஆர் காந்தி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்,காந்தி தெரிவிக்கையில் :
தனியார் கடைகளில் வழங்குவதை விட மிகவும் தரமான பொருட்களாகவே நியாய விலை கடைகளில் பொருட்கள் வழங்குகின்றனர் மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அரசாகவே திமுக அரசு எப்பொழுது பொறுப்பேற்றாலும் செயல்பட்டு வருவதாக பெருமிதமாக அமைச்சர் கூறினார்.