இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்த நிலையில், அந்நாட்டின் ராணியாக ஆனவர், அவரது மகள் எலிசபெத். இவர் இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்பட்டர் அவருக்கு அப்போது வயது 25. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் ‘வின்ஸ்டன் சர்ச்சில்’, அதன் பின்னர் சர் ‘ஆண்டனி ஈடன்’ தொடங்கி ‘போரிஸ் ஜான்சன்’ வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார்.

தற்போது இங்கிலாந்து பிரதமராக ‘லிஸ் டிரசை’ ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார். அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15-வது பிரதமர் என்ற சிறப்பை ‘லிஸ் டிரஸ்’ பெறுகிறார்.

ராணி இரண்டாம் எலிசபெத் பதவிக்காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களைக் கண்டிருக்கிறது. அவர்கள், “மார்கரெட் தாட்சர், தெரசா மே, லிஸ் டிரஸ்” ஆவார்கள்.
11 பிரதமர்கள் கன்சர்வேடிவ் கட்சியினர். 4 பேர் மட்டுமே தொழிற்கட்சியை சேர்ந்தவர்கள்.