பிக் பாஸ் நிகழ்த்தியில் ஒவ்வொரு சீசன்களிலும் ஒரு காதல் கதை மலரும்.அது போல இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா மீது காதல் கொண்டுள்ளது பார்க்கும் ரசிகர்கள் அனைவர்க்கும் அப்பட்டமாக தெரிகின்றது.
ஆரம்பத்திலேயே ரச்சிதா என்னுடைய க்ரஷ் என்று கூறிய ராபர்ட் மாஸ்டர் கமல் முன்பே அவரிடம் ப்ரபோஸ் பண்ண முயற்சித்தார். ஆனால் பட்டென டாப்பிக்கை மாற்றிவிட்டார் கமல்ஹாசன். ரச்சிதா, ராபர்ட்டை அண்ணன் என்று கூறிய பின்னரும் அவர் விடுவதாக தெரியவில்லை.
இந்நிலையில் ரச்சிதாவின் கணவரான சீரியல் நடிகர் தினேஷ், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ஒரு பெண் ஒரு ஆணுடன் சிரித்து பேசுவதால் அதை காதல் என்று சொல்ல முடியாது. இதை பார்க்கும் போது பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் செய்யும் செயல் போல் உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று கூறியுள்ள தினேஷ், சில விஷயங்களை அவர் தவிர்த்திருக்கலாம் என கூறியுள்ளார் தினேஷ் என்பது குறிப்பிடத்தக்கது