பிக் பாஸ் சீசன் 6 துவங்கி ஐம்பது நாட்களை கடந்துவிட்டது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். தற்போது மொத்தம் 14 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளரான ஜனனி ரச்சிதாவின் உடை பற்றி விமர்சித்து இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. ‘எருமைமாட்டிற்கு சேலை கட்டி விட்டது போல இருக்கு’ என ஜனனி சொன்னது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
ரச்சிதா அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார் என்றாலும், பிக் பாஸ் சென்றதில் இருந்து தினேஷ தொடர்ந்து ரச்சிதாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

ஜனனிக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தற்போது அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். மைனா மற்றும் ஜனனிக்கு ஓட்டு போடாதீங்க என அவர் கூறி இருக்கிறார்.