சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ரச்சிதா. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். நடிகை ரச்சிதாவுக்கும், சீரியல் நடிகர் தினேஷுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்ததாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்டு வரும் பயில்வான், ரச்சிதாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அவர் கூறி உள்ளார்.ரச்சிதா, சீரியல் இயக்குனர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்ததாகவும், அவரைத்தான் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பயில்வான் கூறி உள்ளார். பயில்வான் கூறிய இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.