Skygain News

அசீமை விமர்சனம் செய்த ரச்சிதா..வரவேற்கும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த சீசனில் முதல் போட்டியாளராக சாந்தி ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.அதன் பின் ஜி.பி முத்து தானே வீட்டை விட்டு சென்றார்.ந்நிலையில் இந்த வார பொம்மை டாஸ்க் துவங்கியுள்ளது. இதில் இரண்டு அணிகளாக பிரிந்து தங்களது பொம்மையினை டால் தொட்டியில் இருந்து டால் ஹவுஸில் சேர்க்கக் கூடிய டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது.

இதில் எதிர் அணியினரின் பொம்மையை எடுத்துக்கொண்டும், அவர்களின் பொம்மையை டால் ஹவுஸில் கொண்டு சேர்ப்பதை தடுத்துக் கொண்டும் இந்த கேமை ஆட முடியும். இந்த போட்டியில் தனலட்சுமி, அசீம் இடையில் சண்டை வெடித்துள்ளது.

இந்நிலையில் ரச்சிதா, ராபர்ட் உள்ளிட்ட டீம் அசீம் பற்றி பேசும் போது, அசீம்தான் தன்னுடைய பொம்மையை எடுத்து ஆயிஷாவிடம் கொடுத்ததாக ரச்சிதா கூறுகிறார். தொடர்ந்து ராபர்ட்டும் ரச்சிதாவும் அசீம் மைண்ட் கேம் ஆடுவதாக குறிப்பிடுகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More