இந்திய அணி தற்போது T20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.இதையடுத்து இங்கிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதவுள்ளது இந்தியா.இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 குறித்த விவாதம் தான் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே தினேஷ் கார்த்திக் – ரிஷப் பண்ட் ஆகியோரிடையேயான போட்டி இருந்து வருகிறது.
இதில் தினேஷ் கார்த்திக் தான் ப்ளேயிங் 11ல் இடம்பிடித்தார். ஆனால் அவரால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. இதனையடுத்து ரிஷப் பண்ட்-க்கு கடந்த ஜிம்பாப்வே போட்டியின் போது வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் சொற்ப ரன்களுக்கு நடையை கட்டினார்.இந்நிலையில் இதுபற்றி ராகுல் டிராவிட் பேசியதாவது , ஒரு வீரரின் ஃபார்மை ஒரே ஒரு போட்டியை வைத்து முடிவு செய்ய மாட்டோம்.
எதிரணியில் இதுபோன்ற பவுலர்கள் இருக்கிறார்களோ, அதற்கேற்ற வகையில் தான் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வோம். அதில் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. நாங்கள் இன்னும் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை இழக்கவில்லை. 15 வீரர்கள் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.அனைத்து வீரர்களையும் எப்போது வேண்டுமானாலும் அழைப்போம் என்று தான் கூறி வைத்துள்ளோம்.

ரிஷப் பண்ட் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஜிம்பாப்வே போட்டியில் இடதுகை ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய வேண்டும் என பணி கொடுத்தோம். அவரும் அதை முயற்சித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அது தவறானது. ரிஷப் பண்ட்-ஐ மனதில் வைத்துள்ளோம்.