Skygain News

ஷமியின் நிலை இதுதான்..டிராவிட் ஓபன் டாக்..!

இந்திய அணி தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா இடையே நடந்த T20 தொடரை கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியா T20 உலகக்கோப்பையில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றுள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை மாற்றுவீரர் பற்றி எந்த தகவலும் இல்லை. இதைத்தொடர்ந்து ஷமியின் நிலை குறித்து ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அவர் கூறியதாவது ,பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு தான். இருப்பினும் மற்ற வீரர்களுக்கு இதை வாய்ப்பாக நான் கருதுகிறேன். முகமது ஷமி மாற்று வீரராக அறிவிக்கப்படுவாரா என்று எனக்குத் தெரியாது.

இருப்பினும் அனுபவம் வாய்ந்த அவர் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார்.முகமது ஷமி தொடர்பான மெடிக்கல் ரிப்போர்ட் எங்களுக்கு கிடைத்தவுடன் தான் பும்ராவுக்கு பதில் அவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

பும்ராவுக்கு பதில் யார் என்பது குறித்து முடிவெடுக்க அக்டோபர் 15ஆம் தேதி வரை காலம் இருக்கிறது. நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மாற்றுவீராக வருபவர் நன்றாக பந்து வீச வேண்டும். உங்களால் எதை சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் ராகுல் ட்ராவிட்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More