கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் பெய்த காண மழையால் அங்குல ராமநாத சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்து உள்ளதால் பக்தர்கள் பெரும் வேதனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று ராமநாத சுவாமி கோவில், அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் காண வருவார்கள். கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் நீராடும் பக்தர்கள் சாமி, சுவாமி அம்மன் சன்னதி உள்ளிட்ட முதல் பிரகாரத்தில் துணியுடன் வருவதை கோவில் நிர்வாகம் தடுத்து பிரகாரத்தை சுத்தம் சுகாதாரமாக பராமரித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலையில் ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் கோவில் கிழக்கு வீதி சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கோயிலில் பர்வத வர்த்தினி அம்மன் முன்பு மண்டபத்திற்குள் மழை நீர் புகுந்தது. அரை அடி உயரத்தில் தண்ணீர் தேங்கி கிடந்தது . சாமி தரிசனம் முடித்து வெளியேறிய பக்தர்கள் தேங்கி கிடந்த மலை நீரில் மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்றனர்.

நேற்று நள்ளிரவில் பெய்த மழையால் சாமி சன்னதியை சுற்றி மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர். உண்டியல் மூலமாகவும்,சிறப்பு தரிசன கட்டண மூலமாகவும் ஓராண்டுக்கு 20 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தும் மழை நீர் கோவிலுக்குள் புகுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.