கடந்த 29ஆம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சென்னை புறநகரில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழைப்பொழிவு நவம்பர் நாலாம் தேதி வரை நீடிக்கும் என்றும் கனமழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதேபோல் தொடர் கனமழை பெய்வதால் நேற்று, இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆறாம் தேதி வரைக்கும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. முன்னதாகவே தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மஞ்சள் அலர்ட்டாக குறைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி , காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.