தமிழக பகுதிகளில் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையிலும் , சென்னை சுற்று வட்டார பகுதியிலும் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. அண்ணா சாலை , ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை, சென்ட்ரல் , எழும்பூர், கிண்டி, அடையாறு , வேளச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்து வருகிறது.