ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார்.. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிகப்பெரிய ஜெயில் செட்டில் நடந்து வருகின்றது. மேலும் ரஜினி தொடர் தோல்விகளினால் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இருப்பதால் ஜெயிலர் படத்திற்காக வேலையை பார்த்து பார்த்து செய்து வருகிறாராம்.
அதன் காரணமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானதாக தகவல் வந்தது. இதையடுத்து இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது.
தர்பார் படத்தின் தோல்வியை சரிக்கட்ட ரஜினி லைக்கா நிறுவனத்திற்கு ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக கூறியதாகவும், அதன் காரணமாகவே லைக்கா நிறுவனத்துடன் மீண்டும் ரஜினி கூட்டணி அமைத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும் இப்படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.