ஒருகாலக்கட்டத்தில் ரஜினி தொட்டதெல்லாம் வெற்றியாகவே அமைந்தது. அவர் எடுத்த சில தைரியமான முடிவுகள் வெற்றியிலேயே முடிந்தன. மளமளவென வெற்றிகளை குவித்து சூப்பர்ஸ்டாராக மாறிய ரஜினி கடந்த நாற்பது ஆண்டுகாலமாக சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை தக்கவைத்து வருகின்றார்.
ஆனால் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் சில படங்கள் படுதோல்வியை சந்தித்து வருவதால் கட்டாய வெற்றியை பெரும் நோக்கத்தில் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில்நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தையடுத்து ரஜினி டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வந்தது. மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் பேசப்பட்டது. ரஜினி தர்பார் படத்தின் தோல்வி காரணமாக லைக்கா நிறுவனத்திற்கு இப்படத்தை நடித்து கொடுப்பதாக சமூகத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் பிரபல நடிகராக வலம் வரும் அரவிந்த் சாமி வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகின்றது. ரஜினியின் தளபதி படத்தின் மூலம் அறிமுகமான அரவிந்த் சாமி பல வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியுடன் நடிக்க இருக்கின்றார். ஆனால் இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என் தெரியவில்லை ன்பது குறிப்பிடத்தக்கது