ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் அடுத்தாண்டு வெளியாக இருக்கும் நிலையில் அடுத்ததாக ரஜினி லைக்கா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட உள்ளதால், அந்நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு சென்றுள்ளார் ரஜினி.கடந்தாண்டு மறைந்த புனீத் ராஜ்குமார் நடிகராக மட்டுமின்றி சமூக நலப்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
இதனால் அவருக்கு மக்கள் மனதில் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு என்று சொல்லலாம். அவரை கவுரவிக்கும் விதமாக கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது இன்று வழங்கப்பட உள்ளது.இதற்காக பெங்களூருவில் இன்று மாலை பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவின் கலந்துகொள்வதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார் ரஜினிகாந்த்.
#Rajinikanth at #Bangalore to attend #KarnatakaRatna award function.
— Cinema Calendar (@CinemaCalendar) November 1, 2022
That walk tho 🔥🔥#Superstar #Jailer
pic.twitter.com/0HsJW8M1O8
பெங்களூரு விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் நேரில் வரவேற்றார். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.