சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஒரு சில தோல்விப்படங்களில் ஒன்றுதான் பாபா.என்னதான் இப்படம் தோல்வியை சந்தித்தாலும் பல ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் விருப்பத்திற்குரிய படமாக இருக்கின்றது.சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் பாபா.
கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மனீஷா கொய்ராலா, கவுண்டமணி, சுஜாதா, நம்பியார், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
2002ஆம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் படு மோசமான வசூலை பெற்றது. இதனால் பாபா திரைப்படம் படுதோல்வி என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இப்படத்தை புதிய பொலிவுடன் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாபா திரைப்படம் மீண்டும் எடிட்டிங் செய்யப்பட்டு வருவதாகவும் கலர் கிரேடிங், ரீமிக்ஸ் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.மேலும் இப்படம் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது