ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இதையடுத்து ரஜினி சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் என்ற படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதில் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.இந்நிலையில் ரஜினி நற்பணி மன்றத்தின் தலைமை நிர்வாகியும், சூப்பர்ஸ்டாரின் நெருங்கிய நண்பருமான சுதாகர் என்பவர் டுவிட்டரில் ரஜினி பற்றி பரவும் போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது : “தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பைக் குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரச்சாரம் உலா வருகிறது.
இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர்.

இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார், அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றார் ரஜினி