ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். நெல்சன் இறுதியாக டைரக்ட் செய்த ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்திருந்தார்.
இந்தாண்டு தமிழ்ப் புத்தாண்டில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், பீஸ்ட் வெளியாகும் முன்பே ரஜினியின் தலைவர் 169 படத்தில் நெல்சன் கமிட் ஆகிவிட்டார்.
பீஸ்ட் தோல்வியால் நெல்சன் மாற்றப்படுவார் என சொல்லப்பட்ட நிலையில், ரஜினி அவர் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், ஜெயிலர் ஷூட்டிங் சத்தமே இல்லாமல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிரது.