ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார்.
ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டது. ‘படையப்பா’ படத்திற்கு பிறகு ரஜினி, ரம்யா கிருஷ்ணன் காம்போ இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
#Jailer 50% shoot complete..
— Ramesh Bala (@rameshlaus) November 9, 2022
Focus is on action..#Superstar
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கிய ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 50% அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நெல்சனின் முந்தைய படங்களை விட ஜெயிலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமுள்ளதாகவும் கூறப்படுகிறது.