அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், இந்த படத்தையும் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் குறித்து ஸ்டண்ட் சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினியின் சண்டைக் காட்சிகள் ஜெயிலர் படத்தில் அமைய வேண்டும் என்று இயக்குனர் நெல்சன் சொன்னார்.

அதன்படி, எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு மாஸ்ஸாக சண்டைக் காட்சிகள் வந்துள்ளன.3 சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளோம். இன்னும் சில ஆக்சன் சீன்கள் இருக்கின்றன. எந்த சண்டை காட்சிகளிலும் இடம்பெறாத வகையில் ஜெயிலர் ஆக்சன் சீன்கள் அமைந்திருக்கும். இதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார் சிவா