ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது.மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தனர்.
தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு கடலூரில் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தொடர்ந்து ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படமும், மாஸாக திரும்பி நிற்கும் புகைப்படமும் ஜெயிலர் படப்பிடிப்பில் தளத்தில் இருந்து கசிந்துள்ளது.
Shooting Spot pics #Jailer @rajinikanth pic.twitter.com/qtkvqO0UMt
— Ⓜ️🅰️N🅾️ (@rajini_mano) October 14, 2022
இதனை பார்த்த ரசிகர்கள் சமூகத்தளங்களில் இப்புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்