ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். அனிருத் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை சமீபகாலமாக பெறாததும், அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் அவர் இனி படங்களில் நடிப்பது சந்தேகமே என்ற தகவல் பரவி வந்தது.
ஆனால் அதெற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்க இருக்கிறார்.
அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் நிலையில் அதற்கு அடுத்து ரஜினி நடிக்கும் திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறதாம்.அந்த திரைப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருப்பதாகவும், அதர்வா கதாநாயகனாக நடிக்கும் அப்படத்தில் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.