கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
மேலும் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.வசூலையும் வாரி குவித்து வருகிறது. படத்தை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
What more can I ask for ? It was like to be near a sun . So warm . The tight hug , those eyes , the laugh , the style and the love . What a personality . SUPERSTAR @rajinikanth saw #LoveToday and wished me ❤️ Will never forget the words you said sir ❤️@archanakalpathi pic.twitter.com/Zm0ceJ1iZm
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 12, 2022
இந்நிலையில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தை சந்தித்து பாராட்டு பெற்ற போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.