ரஜினி தற்போது நெல்சனின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். ரஜினி தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் அவரது சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினியின் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஹிட்டாகவில்லை.மேலும் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. எனவே ரஜினியின் மார்க்கெட் சற்று ஆட்டம் காண ஆரம்பித்தது. மேலும் அவரின் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் ரஜினி தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்.நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதைத்தொடர்ந்து டான் படத்தை இயக்கி வெற்றிகண்ட சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி தனது 170 ஆவது படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.இந்நிலையில் இப்படத்திற்காக ரஜினி தன் சம்பளத்தை அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல் வருகின்றன. ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக 85 கோடி வரை சம்பளமாக வாங்கும் ரஜினி தலைவர் 170 படத்தில் நடிப்பதற்காக 70 கோடி சம்பளமாக வாங்கவுள்ளாராம்.