ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோலில் நடிக்க, ரஜினி கெஸ்ட் ரோலில் வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தில் ரஜினி ஏற்று நடிக்கும் காதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி ரஜினி இப்படத்தில் மும்பையை சார்ந்த டானாக நடிப்பதாகவும், அவர் 30 நிமிடங்கள் லால் சலாம் படத்தில் வருவார் என்றும் தகவல் வந்துள்ளது. மேலும் பாட்ஷா படத்தை போன்று ரஜினியின் கதாபாத்திரம் லால் சலாம் படத்தில் செம மாஸாக இருக்கும் என்றும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.