ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இதையடுத்து ரஜினி சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்க உள்ள படத்தின், பூஜை நவம்பர் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகளின் வேண்டுகோளுக்காக கேமியோ ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இந்த தகவல் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.ஐஸ்வர்யா ரஜினி இதற்கு முன்பு 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது