Skygain News

கெத்தாக அமர்ந்து படம் பார்க்கும் ரஜினி..எந்த படம் தெரியுமா ?

தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ரஜினிகாந்த் தான் தயாரித்து கதை திரைக்கதை எழுதிய பாபா திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.அந்த படத்தின் வேலைகளுக்காக ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினிகாந்த், அவர் இயக்கிய லே மஸ்க் திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகி இருந்தார். அப்படத்தையும் இவர் தான் தயாரித்து இருந்தார். இதையடுத்து இயக்குனராகவும் அவதாம் எடுத்துள்ளார் இசைப்புயல்.அந்த வகையில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் லே மஸ்க் (Le Musk).

வெறும் 36 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இப்படத்தை அண்மையில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டு பாராட்டுக்களை பெற்றார். இந்த படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், இப்படத்தை விர்சுவல் ரியாலிட்டி முறையில் அவர் உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில், லே மஸ்க் திரைப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு போட்டுக் காட்டி உள்ளார் ஏ.ஆர்.ரகுமான். சமீபத்தில் பாபா பட ரீ-ரிலீஸ் பணிகளுக்காக ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினிகாந்த், அவர் இயக்கிய லே மஸ்க் படத்தை கண்டு ரசித்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More