இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தான் ரஜினி. தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இன்று அமிதாப் பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி வாழ்த்தியது தான் தற்போது ட்விட்டரில் டிரண்டாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து அசத்தி வருபவர் அமிதாப் பச்சன். இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சோசியல் மீடியா வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், டுவிட்டர் வாயிலாக அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : ”தி லெஜண்ட்.. என்னை எப்போது ஊக்கப்படுத்திய ஒருவர்… உண்மையான உணர்வுப்பூர்வமான நடிகர், நம் பெருமைமிக்க இந்திய சினிமாவின் சூப்பர்ஹீரோ 80க்குள் நுழைகிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது அன்புள்ள மற்றும் மரியாதைக்குரிய அமிதாப் ஜி. நிறைய அன்போடு உங்களுக்கு எல்லாமே சிறந்ததாகவே அமையட்டும்” என பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த ட்வீட் தான் சமூகத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது