சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘நாதஸ்வரம்’. திருமுருகன் இயக்கிய இந்த சீரியலில் சம்மந்தம் என்கிற காமெடி ரோலில், உடல் மொழியாலும் நடித்து மிகவும் பிரபலமானவர் முனீஸ் ராஜா. நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பி இவர்.முனீஸ், ஜீனத் திருமணம் சர்ச்சைகளை கிளப்பியதை தொடர்ந்து ராஜ்கிரண் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் ராஜ்கிரணின் இரண்டாவது மனைவி கதீஜா, பிரியா 17 சவரன் நகை மற்றும் குடும்பத் தாலியை எடுத்து சென்றுவிட்டதாகவும், ராஜ்கிரண் மீது அவதூறு பரபரப்புவதாகவும் புகார் அளித்தார்.இதுதொடர்பான விசாரணை முசிறி டிஎஸ்பி அலுவலத்தில் நடந்தது. அப்போது கதீஜா தரப்பில் யாரும் ஆஜராகாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியா, “கதீஜா ராஜ்கிரண் (பிரியாவின் தாயார்) ஒவ்வொரு நாளும் எனக்கு டார்ச்சர் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இதனால கடுமையான மன உளைச்சல்ல இருக்கேன். எங்க போறதுன்னு தெரியாம ஆதரவு கேட்டு எங்க அப்பாகிட்ட போனா, அவர் மேலயும் புகார் கொடுத்துருக்காங்க.

ராஜ்கிரண் சார் நல்லவரா இருந்தா, என்னை இப்படி தொந்தரவு செய்றதை கன்ட்ரோல் பண்ணியிருக்க முடியாத. அந்த வீட்டுக்கு நான் வேலைக்காரியாக இருக்கணும்னு தான் எதிர்ப்பார்க்குறாங்க. என்னைய என் கணவரோட தயவுசெஞ்சு வாழ விடுங்க. என்னை தொந்தரவு பண்ணாதீங்க. எங்க அப்பா, தாத்தா பாட்டி கொடுத்த நகைகள் அவங்க வீட்ல இருக்கு. அதை போலீஸ் தான் மீட்டுக் கொடுக்கணும்” என தெரிவித்துள்ளார்.