Skygain News

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்..! வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கிய விசைப்படகு மீனவர்கள்

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 650 க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகிலிருந்த ஆறு மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் மன்னார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர் .

இச்சம்பவத்தை கண்டித்து நேற்று ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் அமைந்துள்ள மீன்வளத் துறை அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இன்று முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.