ஐந்து நாட்களுக்குப் பின்பு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்ற இன்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி கடந்த நவம்பர் 18ஆம் தேதியிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்தனர்.
மன்னர் வளைகுடா பாக்சலசந்தி கடற் பகுதியில் காற்றின் வேகம் குறைந்த காரணத்தால் மீனவர்களுக்கு ராமேஸ்வரம் மீன்வளத்துறை சார்பில் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு இன்று வழங்கப்பட்டது சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர் மேலும் காற்று காலமாக இருப்பதன் காரணமாக மீனவர்கள் பாதுகாப்பாக கடற் பகுதிகளில் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது