விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ விலங்குகள் நலனை முன்னிறுத்தும் ‘ட்ரை வேகன்’ பிரச்சாரத்துக்காக நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
நாடே பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அனுஷ்கா சர்மா, நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் பலர் இந்த அமைப்புக்கு ஆதரவு கொடுத்து வந்தனர் . அந்த வரிசையில் தற்போது ரன்வீர் சிங்கும் இணைய உள்ளார். அதன்படி விலங்குகளை உணவுக்காக கொல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி இந்த பிரச்சாரம் அமைய உள்ளது.
அதற்கான அட்டை படங்களில் ஆடையின்றி நடிக்க நடிகர் ரன்வீர் சிங்கிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

“ரன்வீர் சிங் எங்களுடைய இதழுக்கு சிறந்த மாடலாக இருப்பார் அதன் காரணமாகவே அவரை நாங்கள் தேர்வு செய்துள்ளோம் என்றும் , மனிதர்களைப் போல விலங்குகளும் ரத்தம், சதை, எலும்புகளால் ஆனவை. விலங்களுக்கும் உணர்ச்சிகள் மற்றும் தனித்துவமான குணங்கள் உண்டு.
விலங்களால் வலியை உணர முடியும். அவை குடும்பமாக, கூட்டமாக வாழ விரும்பும். விலங்குகள் சாக விரும்பவில்லை” என்று பீட்டா அமைப்பின் இந்தியாவுக்கான துணைத் தலைவர் சச்சின் பங்கெரா தெரிவித்தார்.