கன்னடத்தில் கிர்க் பார்ட்டி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார் ராஷ்மிகா.அதைத்தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார்.இப்படம் அவரை தமிழிலும் பிரபலமான நடிகையாக மாற்றியது.இதைத்தொடர்ந்து தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தன்னை பற்றி வரும் ட்ரோல்களுக்கு ராஷ்மிகா பதிலடி கொடுத்துள்ளார்.அவர் கூறியதாவது ,கடந்த சில மாதங்களாக சில விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்கின்றன. அவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன். ஏனெனில் நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன்.. இதனை நான் சில வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் ஆனால் சற்று தாமதமாகிவிட்டது.
சமூக வலைதளங்களில் இல்லாத விஷயங்களை விளம்பரப்படுத்துவது, கேலி செய்வது, பைத்தியக்காரத்தனமான கருத்துக்களை தெரிவிப்பது போன்றவை என் மனதை மிகவும் காயப்படுத்துகிறது. இவையெல்லாம் என் வேலையை செய்ய விடாமல் தடுக்கிறது.
நேர்காணல்களில் நான் சொல்லும் சில விஷயங்கள் எனக்கே எதிராக மாறுவதையும் கண்டேன். சினிமாவில் எனக்குள்ள நட்பின் அடிப்படையில் பொய்யான கதைகளை பரப்புகிறார்கள்.
என்னைப்பற்றிய விமர்சனங்கள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமானவும் இருந்தால் நான் அவற்றை வரவேற்கிறேன், ஏனென்றால் அவை என்னை மாற்றிக்கொள்ளவும், மேம்படுத்தவும் உதவுகின்றன.ரொம்ப நாளா இதையெல்லாம் தவிர்த்துவிட்டு பொறுமையா இருந்தேன். ஆனா இப்போ இது எல்லைமீறிவிட்டது.

இனிமேல் பதில் சொல்லலைன்னா வேற எதாச்சும் எழுதுவாங்க. என்னை பலர் நேசிக்கிறார்கள், எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அவர்களின் அன்பும் ஆதரவும் என்னை முன்னோக்கி செல்ல உதவுகிறது. அவர்களுக்காகவே இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களை சந்தோஷப்படுத்துவதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என ராஷ்மிகா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.