தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா. கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராஷ்மிகா, ‘சுல்தான்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது விஜய் ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் இந்தப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ படத்தினை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ராஷ்மிகாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
#rashmikamandanna Big Fan Got Signature 😍💃📷 @viralbhayani77 pic.twitter.com/xBWEmsPcZa
— Viral Bhayani (@viralbhayani77) September 26, 2022
அதில், ராஷ்மிகாவிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த ரசிகர் ஒருவர் அவரது நெஞ்சை காட்டி டிசர்டில் ஆட்டோகிராப் போடும்படி கேட்டிருக்கிறார். முதலில் தயங்கிய ராஷ்மிகா, அவர் கட்டாயப்படுத்தி கெஞ்சி கேட்டதால் வேறு வழியில்லாமல் ஆட்டோகிராப் போடுகிறார்.